PSLV ரொக்கெட் மூலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் Space X விண்கலம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் Space Docking திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
Space Docking
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது.
சந்திரயான்-4, ககன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களை எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் நோக்கில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
இதன் அடுத்தபடியாக 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய ஆய்வு விண்வெளி மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது SpadeX எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. SpadeX என்பது Space Docking எனும் முன்தயாரிப்பு பணிகளின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின்படி, விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசர் மற்றும் டார்கெட் எனும் 2 விண்கலன்களை, இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியார் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.
PSLV C-60 ரொக்கெட் மூலமாக இரட்டை விண்கலன்களை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இம்மாத இறுதியில் இது ஏவப்படும் எனக் கூறப்படுகிறது.
எப்படி செயல்படுத்தப்படும்?
விண்ணில் ஏவப்படும் விண்கலன்கள், புவியில் இருந்து சுமார் 700 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட உள்ளன.
அதன் பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கிடையில், ரொக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு, அதில் விண்கலன்களை பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |