உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- பதக்கங்களை வென்றது இந்தியா
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
பதக்கங்களை வென்றது இந்தியா
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது.
போபாலில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது நாளில், இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றது. சீனா 2 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் உலக சாம்பியனான ருத்ராக்ஷ் பாட்டீல் மற்றும் ஆர். நர்மதா நிதின் ஆகியோர் வெண்கலப் பதக்கமும், இரண்டாவது போட்டியில் வருண் தோமர் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இந்தியா பதக்கப் பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றுள்ளது. சீனா 3 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியின் 3ம் நாளான இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
India won a silver and a bronze while China retained its top spot by winning two gold medals on the second day of the International Shooting Sport Federation (ISSF) World Cup shooting championship in Bhopal,MP. pic.twitter.com/FxtntAwyPS
— AIR News Trichy (@airnews_trichy) March 23, 2023
#Paris2024 quota winner for ?? @RudrankkshP ends the ISSF Shooting World Cup Bhopal campaign with a 10m Air Rifle Mixed team?and an individual Men's 10m Air Rifle?
— Khelo India (@kheloindia) March 24, 2023
He has transitioned well from a #KheloIndiaAthlete to a #TOPSchemeAthlete. Great going, champ! ???#KheloIndia pic.twitter.com/Fh10nqdfyb