வரலாற்றிலேயே முதல்முறை...ஜேர்மன் பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை
ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம்
ஏராளமானோர் ஜேர்மன் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் பாஸ்போர்ட் பெற குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை காத்திருக்க நேரிடலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பாஸ்போர்ட் தயாரிக்க, தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து முதல் ஆறு வேலை நாட்கள் தேவைப்படுகின்றன. அத்துடன், உள்ளூர் அலுவலர்கள் பாஸ்போர்ட் பரிசீலிக்கும் நேரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளதால், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் பாஸ்போர்ட் பெற குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை காத்திருக்க நேரிடலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், Express order முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களுக்கு வழக்கமான நேரத்திலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிடும்.
600,000க்கும் அதிகமான பாஸ்போர்ட்கள்
ஜேர்மன் வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த ஆண்டின் முதல் நான்கு வாரங்களிலேயே 600,000க்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் ஜேர்மன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |