இளவரசர் ஹரியும் மேகனும் பயணித்த காரை புகைப்படக்காரர்கள் துரத்திய விவகாரம்: மேகனுடைய நண்பர் குற்றச்சாட்டு
இளவரசர் ஹரியும் மேகனும் பயணித்த கார், பாப்பராசிகள் எனப்படும் புகைப்படக்கலைஞர்களால் துரத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முக்கியக் காரணம், இதேபோல புகைப்படக்காரர்களால் துரத்தப்பட்டபோதுதான் இளவரசி டயானா விபத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது.
மேகனுடைய நண்பர் குற்றச்சாட்டு
ஹரி மேகனுடைய கார் துரத்தப்பட்டதாக தகவல் வெளியானதுமே, மேகனுடைய நண்பரும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவருமான Omid Scobie, இளவரசர் ஹரி மேகனுடைய கார் துரத்தப்பட்ட விடயம், டயானாவின் வாழ்வில் நிகழ்ந்தது போலவே உள்ளது.
Credit: Getty
நிச்சயமாக மன்னர் சார்லசுக்கும், இளவரசர் வில்லியமுக்கும் அது டயானா குறித்த நினைவுகளைக் கொண்டுவந்திருக்கக்கூடும்.
ஆனால், ராஜ குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக ஹரி மேகனிடம் இதுவரை பேசாதது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
Credit: Getty
மாறுபட்ட கருத்துகள்
ஹரி மேகனுடைய கார் துரத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஹரி மேகன் பயணித்த காரை ஓட்டிய சாரதியே, அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்த சம்பவத்தின்போது பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக கூறப்படுவதையும் பொலிசார் மறுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Credit: ABC NEWS
இந்நிலையில், ராஜ குடும்ப நிபுணரான Angela Levin, இந்த சம்பவம் தொடர்பாக ஹரி மேகனிடம் ராஜ குடும்பத்தினர் இதுவரை பேசவில்லை என கூறப்படுவது குறித்து, இது மன்னர் சார்லசையும், மன்னராட்சியையும் தோல்வியடையச் செய்யும் முயற்சி என்று கூறியுள்ளார்.
ஒரு தந்தை தன் மகனிடம் பேசினாரா இல்லையா என்பதைக் குறித்து கவலைப்படுவது நம் வேலையல்ல என்று கூறியுள்ள Angela, ஒரு தந்தை மகனிடம் என்ன பேசினார் என்பது முதல் பக்க செய்தியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், மன்னராட்சியை விரும்பாதவர்கள் மன்னரை பதவியிறக்க சாக்குப்போக்கு கண்டுபிடிப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
Credit: AFP