இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியிலிருந்து ஓரங்கட்டப்படும் மூத்த இலங்கை வீரர்? கசிந்த முக்கிய தகவல்
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியிலிருந்து இலங்கை மூத்த வீரர் ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்திய அணியை உலுக்கிய நிலையில், இலங்கைக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற வெற்றி கணக்கில் சமனில் உள்ளது.
இன்று கொழும்பு மைதானத்தில் நடக்கவிருக்கும் 3வது டி-20 போட்டியில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் இருந்து பந்து வீச்சாளர் இசுரு உதான ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உதானவுக்கு பதிலாக தனஞ்சய லக்ஷன் அல்லது இஷான் ஜெயரத்னே இலங்கை அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரில் லக்ஷன் இலங்கை அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        