என் வாழ்கையிலே இவர்களுக்கு பந்து வீசுவது தான் மிகவும் சவலாக இருந்தது! உண்மை வெளிப்படுத்திய சுழல்பந்து ஜாம்பவான் முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த கிரிக்கெட் வீரருக்கு பந்து வீச சவலாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரா முரளிதரன், தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் espncricinfo உடனான நேர்காணில் கலந்துக்கொண்ட முரளிதரன் கூறியதாவது, என்னை பொறுத்தவரை இரண்டு வீரர்களுக்கு பந்து வீச மிகவும் சவலாக இருந்தது.
ஒருவர் பிரையன் லாரா, மற்றொருவரு் வீரேந்திர சேவாக். வீரேந்திர சேவாக், நான் என்ன மாதிரியான பந்து வீசுவேன் என்பதை புரிந்து விளையாடுவார்.
இரண்டு மணிநேரத்தில் 150 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற மன நிலையில் சேவாக் விளையாடுவார்.
98 ஓட்டங்களில் இருக்கும் போது சதத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல், சேவாக் சிக்சர் விளாசுவார்.
சச்சின் டெண்ல்கருக்கு பந்து வீசும் போது பயம் இருக்காது, காரணம் அவர் சேவாக்கை போல பவுண்டரி விளாசமாட்டார். ஆனால், அவரை ஆவுட்டாக்குவது மிகவும் கடினம்.
ஆனால், ஆப் ஸ்பினுக்கு சச்சின் சிறது தடுமாறுவார் என சுழல்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.