IT துறையில் வேலைவாய்ப்பு 8.5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: Indeed கணிப்பு
IT துறையில் தேவை அதிகரிப்பதால் அடுத்த ஆண்டுக்குள் 8 5 சதவீத பணியமர்த்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Indeed நடத்திய சர்வேயின் படி, அடுத்த ஆண்டில் ஐ.டி. துறையில் பணியாளர்களின் நியமனம் 8.5 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவடைந்த நிலையை தொடர்ந்து, திறமையான ஐ.டி. தொழிலாளர்களின் தேவை மீண்டும் அதிகரித்து வருவதாக Indeed அறிவித்துள்ளது.
சர்வேயின் படி, தற்போதுள்ள தொழில்நுட்ப வேலைகளில் 70% வேலை மென்பொருள் துறையில் உள்ளன.
முக்கியமாக, application developer (7.29%), software engineer (5.54%), full stack developer (4.34%), senior software engineer (4.22%) மற்றும் PHP developer (2.51%) போன்ற வேலைகள் அதிகமாக தேவைப்படுகின்றன.
இந்த தேவை, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த மென்பொருள் மீது அதிகமாக நம்புவதால் உருவாகியுள்ளது.
மேலும், தொடக்கநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் புதுப்பிக்கைகள் ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது குறித்து Indeed India-வின் விற்பனைத் தலைவர் சசி குமார் கூறியதாவது: "ஐ.டி. துறை மிகப் பாரிய வேலை வாய்ப்பு துறையாக திகழ்கிறது. ஆனால் சமீபத்திய காலங்களில் வேலை வாய்ப்பில் சரிவு காணப்பட்டது. இப்போது, நிறுவனங்கள் மீண்டும் வேலை நியமனத்தில் கவனம் செலுத்தி வருகின்றன." என்று கூறியுள்ளார்.
இந்த தகவல்களின் படி, full stack developer மற்றும் software engineer-களுக்கு அதிகப்படியான தேவை இருப்பதை சர்வே காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IT Jobs, Tech jobs, application developer, software engineer, full stack developer, senior software engineer, PHP developer