ஜூலை மாதம் வரை இதற்கு தடை! கனடாவின் மிகப்பெரிய நகர அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அரசு அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் வரை அதாவது அடுத்த நான்கு மாதங்களுக்கு மேல் டொராண்டோ நகரில் வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா தின அணிவகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் வானவேடிக்கைகள் உட்பட நகரத்தின் தலைமையிலான மற்றும் நகரம் அனுமதித்த முக்கிய வெளிப்புற நிகழ்வுகள் ஜூலை 1ம் திகதி வரை ரத்து செய்யப்படுகிறது.
நகர அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வெளிப்புற தளங்களில் அல்லது சாலைகள், பூங்காக்கள் மற்றும் குடிமை சதுரங்கள் போன்ற பிற பொது இடங்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் மற்றும் பிற பெரிய, தனிநபர் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ சுகாதாரத்திற்கான மருத்துவ அதிகாரி, நகரின் அவசர உதவி மையம், டொராண்டோ பொலிஸ் மற்றும் பெரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசணை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டொராண்டோ நகர அரசு குறிப்பிட்டுள்ளது.