இந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை 10 கோடிக்கு மேலே எடுத்தா அது தான் முட்டாள்தனம்! எச்சரிக்கும் முன்னாள் வீரர்
ஐபிஎல் தொடரில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த வீரரை பத்து கோடிக்கு மேல் எடுத்தால், அது அவர்களது தலையில் அவர்களே பாறையை தூக்கி வைத்துக்கொள்வது போன்றது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணி நிர்வாகமும், எந்த வீரரை எடுக்கலாம் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக பஞ்சாப் அணி, அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல்ஸையும், ராஜஸ்தான் அணி ஸ்மித்தையும் கழற்றிவிட்டுள்ளதால், இவர்கள் இருவரையும் எடுப்பதில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ், 10 கோடிக்கு மேல் கிளன் மேக்ஸ்வெலை எடுக்க யாராவது திட்டமிட்டிருந்தால் அவர்களது தலையில் அவர்களே பாறையை தூக்கி வைத்துக்கொள்வது போன்றே கூறலாம். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் ஐ.பி.எல் தொடரில் மோசமாக இருக்கிறது.
அவர் நல்ல வீரர்தான் அவரிடம் திறமை இருக்கிறது. ஆனால் நாம் அவரை மிகைப்படுத்தி விட்டோம்.
ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக ஆடவில்லை. யாராவது அவரை 10 கோடி கொடுத்து எடுத்தால் அவர் தலையில் அவர்களே சுமையை வைத்துக்கொள்வதுக்கு சமம் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
