பிரான்ஸ் முதலான நாடுகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஷ்யா எச்சரிக்கை...
ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சரும் மாஸ்கோவுக்கான பிரெஞ்சு தூதரும் நேற்று சந்தித்தார்கள்.
பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சரான Alexander Grushko நேற்று மாஸ்கோவுக்கான பிரெஞ்சு தூதரான Pierre Levyயை சந்திக்கும்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
பிரான்ஸ் முதலான நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என Grushko எச்சரித்துள்ளார்.
அந்த ஆயுதங்கள் பொதுமக்கள் மீதும் உள்கட்டமைப்பு அமைப்புகள் மீதும் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், உக்ரைன் துறைமுகங்களில் தேங்கியிருந்த தானியத்தை வெளியே கொண்டு வருவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் தனது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அப்படி வெளியே கொண்டுவரப்பட்ட பெரும்பாலான தானியம், அதிக தானியத் தேவையிலிருக்கும் ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கப்படாமல், ஐரோப்பாவுக்கே செல்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், உலகின் ஏழை நாடுகளுக்கு செல்லவேண்டிய 300,000 டன் ரஷ்ய உரத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பதாகவும் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.