தூய்மை பணியாளர் ரூ.34 கோடி வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பிய வருமான வரி துறை
தூய்மை பணியாளர் ஒருவர் ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.34 கோடி வரி
ஆக்ராவைச் சேர்ந்த தூய்மை பணியாளரான கரன் குமார் ரூ.34 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் மாதம் 15 ஆயிரம் மட்டுமே சம்பாதித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 22-ம் திகதி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், "கரன் குமாரின் வருமான வரி தாக்கல் படிவங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 2019-20-ல் 33 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 368 ரூபாய் வருமானத்தை அவர் ஈட்டியுள்ளார். இதனால் அவர் ரூ.34 கோடி வரி செலுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரண் குமார் கூறுகையில், "கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆக்ராவின் கைர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன்.
எனக்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நான் படிக்காதவர் என்பதால் வேறொருவர் மூலமாக வருமான வரித்துறை நோட்டீஸ் பற்றி தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சந்தாஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |