பாஜக எம்.எல்.ஏ வீட்டில் 3 முதலைகள்: வருமான வரித்துறை சோதனையின் போது அதிர்ச்சி
வருமான வரித் துறையினரின் திடீர் சோதனையின் போது முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வீட்டில் மூன்று முதலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ரூ.3.80 கோடி ரொக்கம் மற்றும் 19 கிலோ தங்கம் பிடிபட்டது.
அத்துடன் அவர் ரூ.150 கோடி வரை வரி ஏய்ப்பு செய்து இருப்பதையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
மூன்று முதலைகள்
இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் இருந்த சிறிய குளத்தை ஆய்வு செய்த வருமான வரித்துறையினர் அதில் மூன்று முதலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
முதலை வைத்து இருப்பது சட்டவிரோதம் என கூறப்படும் நிலையில், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |