இனி இலங்கை அரையிறுதிக்கு செல்வது கடினம்! தென் ஆப்பிரிக்கா உடனான தோல்விக்கு பின் வெளிப்படையாக கூறிய கேப்டன் தசுன்
தென் ஆப்பிரிக்கா உடனான தோல்விக்கு பின் இலங்கை அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என கேப்டன் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இன்று அக்டோபர் 30ம் திகதி ஷார்ஜாவில் நடந்த சூப்பர் 12 போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றிப்பெற்றது.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது, இலங்கை வீரர் லஹிரு பந்து வீச மில்லர் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
போட்டிக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் சானக்க, 15 ரன்கள் என்பது லஹிருவுக்கு போதுமானதாக இருந்தது.
அவர் யார்க்கர்களை வீசினார், பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக பந்து வீசினார், அதானல் கடைசி ஓவரை அவரை வைத்து போட நான் முடிவு செய்தேன்.
தென் ஆப்பிரிக்கா பேட்டிஸ்மேன்களுக்கு பாராட்டுக்கள், அவர்கள் சிறப்பாக போட்டியை முடித்தனர்.
நிஸ்ஸங்க தரமான வீரர், இந்த தொடரிலும் அவரது திறமையை வெளிப்படுத்தினார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது, இலங்கைக்கான நம்பிக்கையாய் இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா உடனான தோல்விக்கு பின் இலங்கை அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது கடினம்.
அடுத்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் எங்கள் பெருமையை காப்பாற்றுவோம் என்று நம்புகிறோம் என தசுன் சானக்க கூறினார்.