கடைசி ஓவரில் இலங்கை கேப்டன் எடுத்த முடிவு சரியா? தவறா? வெளிப்படையாக கூறிய லசித் மலிங்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் லஹிரு குமாரவை பந்து வீச வைக்க இலங்கை கேப்டன் எடுத்த முடிவு சரியானது என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 30ம் திகதி ஷார்ஜாவில் நடந்த சூப்பர் 12 போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றது.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை வீரர் லஹிரு குமார வீசிய பந்துகளில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை விளாசிய மில்லர், அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
போட்டிக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் சானக்க, 15 ரன்கள் என்பது லஹிருவுக்கு போதுமானதாக இருந்தது.
அவர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக பந்து வீசினார், அதானல் கடைசி ஓவரை அவரை வைத்து போட நான் முடிவு செய்தேன் என விளக்கமளித்தார்.
இந்நிலையில், இலங்கை கேப்டன் தசுன் சானக்க எடுத்த முடிவு சரியானது என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் சானக்காவுக்கு பதிலாக நானாக இருந்தாலும், கடைசி ஓவரை கருணாரத்னவுக்குப் பதிலாக லஹிரு குமாரவை வைத்து தான போட்டிருப்பேன், அது சரியான முடிவு தான்.
லஹிரு தனது முதல் மூன்று ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.
ஆனால் கடைசி ஓவரில் எப்படி பந்து வீசுவது என்பதில் எக்ஸிகியூஷனில் தவறுகள் இருந்தன என்று மலிங்கா கூறினார்.