தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
தென்தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று (21-01-2025) முதல் வரும் (23-01-2025) வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (21-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 29-30°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23°C ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |