தமிழகத்தில் வருகிற 4ஆம் திகதி வரை மழை பெய்யும்.., எந்தெந்த பகுதிகளில் ?
தமிழகத்தில் மார்ச் 4ஆம் திகதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென் தமிழகத்தின் 27ஆம் திகதி கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
28 மற்றும் மார்ச் 1ஆம் திகதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 2ஆம் திகதி தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும்.

3ஆம் திகதி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 4ஆம் திகதி தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |