Deepseek AI சாட்பாட்டை முடக்கிய இத்தாலி: பயனர்களின் தரவு பாதுகாப்பில் அதிரடி நடவடிக்கை
பயனர்களின் தரவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீனாவின் டீப்சீக்(Deepseek-AI) சாட்பாட்டை இத்தாலி முடக்கியுள்ளது.
Deepseek AI-க்கு தடை
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பாட் பயன்பாட்டை இத்தாலி அரசு முடக்கி உள்ளது.
இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டீப்சீக் சாட்பாட்டின் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் திருப்திகரமாக இல்லை
டீப்சீக் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகள், அவை எங்கு சேமிக்கப்படுகின்றன, பயனர்களுக்கு அது எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை டீப்சீக் நிறுவனத்திடம் இத்தாலி தரவு பாதுகாப்பு ஆணையம் கேட்டுள்ளது.
இதற்கு டீப்சீக் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் டீப்சீக் நிறுவனம் இத்தாலியில் செயல்படவில்லை என்றும், ஐரோப்பிய யூனியனின் சட்ட விதிகள் தங்களுக்குப் பொருந்தாது என்றும் இத்தாலி ஆணையத்திற்கு பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
AI உலகில் Deepseek ஆதிக்கம்
டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மில்லியன் கணக்கான பயனர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டீப்சீக் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |