PSG அணியில் இருந்து வெளியேறும் இருவர்: வெளியான அறிவிப்பு
UEFA தொடரின் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க, பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வீரர்கள் இருவர் தேசிய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
UEFA அரையிறுதி
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான UEFA National League தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி சூன் 15ஆம் திகதி நடக்க உள்ளது. இதில் நெதர்லாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.
அதேபோல் மறுநாள் நடக்க உள்ள இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், PSG அணியில் விளையாடும் இத்தாலி வீரர்களை இத்தாலி பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி அழைத்துள்ளார்.
PSG அறிவிப்பு
இதுதொடர்பாக பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் வெளியிட்டுள்ள பதிவில், 'சூன் 14 புதன்கிழமை முதல் சூன் 18 ஞாயிறு வரை நெதர்லாந்தில் நடைபெறும் UEFA நேஷனல் லீக் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க, டொனாருமா மற்றும் மார்கோ வெரட்டியை இத்தாலியின் பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி அழைத்துள்ளார்' என தெரிவித்துள்ளது.
மார்கோ வெரட்டி தனது தேசிய அணியான இத்தாலிக்காக 53 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3 கோல்கள் அடித்துள்ளார். இளம் வீரர் டொனாருமா (24) 52 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PSG