சுவிஸை 3-0 காலி செய்த இத்தாலி! நாக் அவுட் சுற்று உறுதி: ரஷ்யாவை விரட்டி அடித்த வேல்ஸ்: அனல் பறக்கும் யூரோ கால்பந்து
யூரோ கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், இத்தாலி மற்றும் வேல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான யூரோ கோப்பை போட்டி சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த தொடர் வரும் ஜூலை 11-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்றைய முதல் ஆட்டத்தில், பின்லாந்து-ரஷ்யா அணிகள் மோதின.
இப்போட்டி St Petersburg-ல் நடைபெற்றது. இதில் பின்லாந்தை ரஷ்யா 0-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ரஷ்யா சார்பில் Aleksei Miranchuk ஒரு கோல் அடித்து அணியின் வெற்றி உதவினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற துருக்கி மற்றும் வேல்ஸ்க்கு இடையேயான போட்டியில், வேல்ஸ் 0-2 என்று அற்புத வெற்றி பெற்றது. வேல்ஸ் அணியில் Aaron Ramsey மற்றும் Connor Roberts தலா ஒரு கோல் அடித்தனர்.
அதன் பின் குரூப் A-வில் இருக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையே க்ரூப் ஸ்டேஜ் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. இதில், இத்தாலியில் Roberto Mancini's அற்புதமாக இரண்டு கோல் அடித்தார்.
சுவிட்சர்லாந்து அணிக்கு இப்போட்டி கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தும், அவர்கள் அதை வீணாக்கிவிட்டனர்.
மேலும், சுவிட்சர்லார்ந்தை 3-0 என்று இத்தாலி வென்றுள்ளதால், குரூப் A-வில் முதல் அணியாக இத்தாலி நாக் அவுட் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது. இதை இத்தாலி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.