241 பேர் பலியான விமான விபத்து! திட்டமிட்ட சதிசெயல்- வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி உள்நோக்கத்துடன் செய்ததாக இத்தாலி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 242 பேரில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, மற்ற 241 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்து தொடர்பாக இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரித்து வருகிறது.
முதற்கட்ட அறிக்கை
கடந்த ஆண்டு வெளியான முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் "ரன்" இலிருந்து "கட்-ஆஃப்" நிலைக்கு நகர்த்தப்பட்டதாகக் கூறியது.
விமானி அறை குரல் பதிவில், விமானிகளில் ஒருவர் மற்றவரிடம் ஏன் எரிபொருளை துண்டித்தார் என்று கேட்பது கேட்கிறது. மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் உள்ளதாக தெரிவித்திருந்தது.

இதனால், விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
விமான விபத்திற்கு விமானியை குற்றஞ்சாட்டுவதாக விமானிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தன. மேலும், விமானி விமானி சுமீத் சபர்வாலின் தந்தை இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
விமானி உள்நோக்கத்துடன் அணைத்தார்
இந்நிலையில், இத்தாலியை சேர்ந்த 'Corriere della Sera' என்ற செய்தித்தாள், விமான விபத்து தொழில்நுட்ப கோளாறால் நடைபெறவில்லை. மாறாக விமானி உள்நோக்கத்துடன் என்ஜினுக்கு எரிபொருள் செல்லும் சுவிட்சை நிறுத்தியதே விபத்துக்கு காரணம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல. திட்டமிட்ட செயல் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானி சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவந்துள்ளது.
அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடத்த ஓரு மாதத்திற்கு பின்னரே தெரிய வந்தது என கூறப்பட்டுள்ளது.
மேலும், போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியாக தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில் உதவும் அமெரிக்க நிபுணர்கள் இது விசாரணையில் பாரிய முன்னேற்றம் என தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் இது தொடர்பான இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். சம்பவம் குறித்த விரிவான விளக்கம் வழங்கப்படுமா, அல்லது பொறுப்பை வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்துவாரா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

தேசிய சர்ச்சை காரணமாக அது தவிர்க்கப்படலாம். இறுதி அறிக்கை வெளியிடப்படுமா இல்லையா என்பது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்கும்,.பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான விவாதங்களை முழுமையாகப் பொறுத்தது.
AAIB, இந்திய அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
நிலைப்பாட்டை மாற்றும் இந்தியா?
அதேவேளையில், இந்த சம்பவம் குறித்து டெல்லி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது போல் தெரிகிறது என்ற யூகத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமான நிறுவனங்களின் பாதுகாப்பு பதிவை "மறுமதிப்பீடு" செய்யும் மேற்கத்திய அச்சுறுத்தல் ஆகியவை விமானப் பயணம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் அதிக முதலீடு செய்யும் ஒரு நாட்டின் பிம்பத்தை சேதப்படுத்தும் அபாயம் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"விமானத்தின் வீழ்ச்சிக்கு விமானிகளில் ஒருவர்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்வது ஒரு மதிப்புமிக்க தியாகமாக பெருகிய முறையில் பார்க்கப்படுகிறது," என்று ஒரு வட்டாரம் விளக்குகிறது என தெரிவித்துள்ளது.
இறுதி அறிக்கை பழி சுமத்துவதற்காக எழுதப்படவில்லை என்றும், விமானப் போக்குவரத்து மேம்பாட்டிற்கு உதவுவதற்காகவும், முடிந்தவரை பூஜ்ஜிய விபத்து விகிதத்தை அடையும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது என்றும் கலந்தாலோசிக்கப்பட்ட நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இறுதி அறிக்கையின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய பகுதி "பரிந்துரைகள்" பிரிவாக இருக்கும் என்று வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. விமானிகளின் தொடர்ச்சியான உளவியல் மதிப்பீடு மற்றும் உடல் மற்றும் மன நல்வாழ்வு குறித்து குறிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான மிக சமீபத்திய விவாதங்களை நன்கு அறிந்த 2 மேற்கத்திய ஆதாரங்களிடமிருந்து இந்த தகவல்களை பெற்றதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இத்தாலி செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு விமானிகள் சங்கம் மற்றும் விமானியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனம் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்றும் நோக்கில் இந்த செய்தி உள்ளதாக விமானிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |