சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து: புதிதாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நாடு
சுவிஸ் மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக இத்தாலி நாடு புதிதாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில், புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
புதிதாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள இத்தாலி
அந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் இத்தாலி நாட்டவர்களான ஆறு பதின்மவயதினரும் அடங்குவர்.
தீவிபத்து நிகழ்ந்த விடுதியின் உரிமையாளர்களான Jacques மற்றும் Jessica Moretti தம்பதியரிடம் ஏற்கனவே சுவிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இத்தாலி அதிகாரிகளும் அவர்கள் மீது வழக்குத் தொடர இருக்கிறார்கள்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், விபத்தின்போது என்ன செய்வது என தங்களுக்கு யாரும் சொல்லவில்லை என்றும், மதுபான விடுதியில் தீயணைப்புக் கருவிகளே இல்லை என்றும், சில நிமிடங்களுக்குள் விடுதியை தீ முழுமையாக சூழ்ந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்கள்.
ஆகவே, சுவிஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது, இத்தாலி அதிகாரிகளும் அந்த மதுபான விடுதி தீவிபத்து தொடர்பில், நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |