மன்னர் சார்லசின் பாதுகாவலர் வைத்திருக்கும் அந்த பொருள்: இணையத்தில் திடீரென வைரலாகியுள்ள விடயம்...
மன்னர் சார்லசின் பாதுகாவலர் ஒருவர் திடீரென இணையத்தில் வைரலாகியுள்ளார்.
அதற்குக் காரணம், அவர் வைத்திருக்கும் அந்த பொருள்...
ஏற்கனவே, மன்னர் சார்லசுடன் பயணிக்கும் அவரது பாதுகாவலர்கள் போலி கைகளை பயன்படுத்துவதாக ஒரு தகவல் பரவிவருகிறது.
அதாவது, அந்த பாதுகாவலர்கள் யாரும் தங்கள் கைகளை அசைப்பதில்லை. ஆகவே, அவை அவர்களுடைய உண்மையான கைகள் அல்ல, அவர்கள் கைகளை தங்கள் கோட்டுக்குள் மறைத்து வைத்திருக்கிறார்கள், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் சட்டென துப்பாக்கியை எடுப்பதற்காக அப்படி செய்கிறார்கள் என ஒருபக்கம் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

Credit: TikTok/kyletillerr
அத்துடன், மன்னரின் பாதுகாவலர்களில் தாடி வைத்திருக்கும் ஒருவர் கையில் ஒரு குடை வைத்திருக்கிறார். ஆனால், அது குடை அல்ல, அது ஒரு துப்பாக்கி, அவர் ஒரு இரகசிய உளவாளி என்கிறார்கள் சிலர்.
விடயம் என்னெவென்றால், ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில், இரகசிய உளவாளி ஒருவர் இதேபோல் ஒரு குடை வைத்திருப்பார். பிரச்சினை ஏற்படும்போது அந்தக் குடையை துப்பாக்கியாக மட்டுமல்ல, கேடயமாகவும் பயன்படுத்துவார் அவர்.
ஆக, மன்னரின் பாதுகாவலரும் அப்படி ஒரு இரகசிய ஆயுதத்தைத்தான் குடை போல வைத்திருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த செய்திகள் வைரலாக இணையத்தில் பரவிவருகின்றன.

Image: Getty Images

Credit: 20th Century Fox

Credit: TikTok/kevhead22/jase_the_ace_