முகம் பொலிவு பெற சோப்பிற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும் !!
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன.
இதிலிருந்து நம் சருமத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- முல்தானி மெட்டி தூள்
- தக்காளி பழம்
செய்முறை
நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது இடித்தோ தக்காளியை விழுதாக தயார்செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ளவேண்டும்.
அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். இந்த விழுதினை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விடவேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது.
கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதால், முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும்.