இது மிகவும் மோசமான அறிகுறி! புடினின் அதிரடி அறிவிப்பால் போரிஸ் ஜான்சன் விரக்தி
உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என புடின் அறிவித்துள்ளதற்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் Donetsk மற்றும் Luhansk குடியரசுகளை ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார்.
புடினின் இந்த நடவடிக்கை வெளிப்படையாக சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இது உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறலாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது மின்ஸ்க் நடைமுறை மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை நிராகரிப்பதாகும், இது மிகவும் மோசமான சகுனம் மற்றும் மிகவும் மோசமான அறிகுறி என்று நான் நினைக்கிறேன்.
விஷயங்கள் தவறான திசையில் செல்கின்றன என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் பேச உள்ளதாகவும், அவருக்கு பிரித்தானியாவின் ஆதரவை வழங்குவதாகவும் போரிஸ் கூறினார்.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது குறித்து பிரித்தானியா நட்பு நாடுகளுடன் விவாதிக்கும்.
Donetsk மற்றும் Luhansk-வை புடின் அங்கீகரித்தது மிகவும் மோசமான செய்தியாகும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொகுப்பில் எங்களுடன் கூட்டாக கையெழுத்திட்டுள்ள நட்பு நாடுகளுடன் நாங்கள் அவசரமாக ஆலோசனை நடத்துவோம்.
எங்களால் இயன்ற அளவு அழுத்தத்தைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமை எவ்வாறு மேம்படுகிறது என்பதைப் பார்ப்பது கடினம் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.