அவர் மட்டும் நின்றிருந்தால்... தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்
ஆரோன் பின்ச் ஆட்டமிழந்ததால் தங்களால் ஆட்டத்தை தொடர முடியவில்லை என தோல்வி குறித்து கொல்கத்தா அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி பட்லரின் அதிரடியான சதத்தினால் 217 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. அணித்தலைவர் 85 ஓட்டங்களும், ஆரோன் பின்ச் 58 ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், 'ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் ரன்-ரேட்டிற்கு ஏற்ப தான் ஆடினோம். ஆனால் நன்றாக ஆடிய பின்ச் அவுட் ஆனதும் அதனை எங்களால் தொடர் முடியவில்லை.
மறுமுனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் முதல் பந்தில் இருந்தே ரன் எடுக்க வேண்டும். எனது திட்டம் இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தான். ராணாவுக்கு போட்டி சஹாலுடன் இருந்தது. ஆனால் அதற்கு அவர் நேரம் கொடுக்கவில்லை. இப்படி நடப்பது வழக்கம் தான்' என தெரிவித்தார்.
மேலும் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், 'ஜோஸ் பட்லரை முன்கூட்டியே ஆட்டமிழக்க செய்திருந்தால் ஸ்கோரில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மைதானம் எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம்' என தெரிவித்தார்.