Apple-ன் பிரம்மாண்ட வெளியீட்டு நிகழ்வு: திகதி உட்பட பல தகவல்கள் இதோ...
ஐபோன் (iPhone) தயாரிப்பாளரான ஆப்பிள் (Apple) செப்டம்பர் 9-ஆம் திகதி இந்த ஆண்டின் மிகப்பாரிய வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.
இதற்காக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளது, அதன் டேக்லைன் 'It's Glowtime'.
இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 தொடரில் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகிய நான்கு மாடல்களை வெளியிடலாம்.
இருப்பினும், இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை.
இந்திய நேரப்படி, இந்த நிகழ்வு செப்டம்பர் 9, திங்கட்கிழமை இரவு 10:30 மணிக்கு தொடங்கும்.
நிறுவனம் 2020 முதல் முன்பே பதிவுசெய்யப்பட்ட வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது, இதில் புதிய தொடர் ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
பல கசிவுகளின்படி, ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் டிஸ்பிலே அளவை மாற்றலாம்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறலாம், ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் 2017-ஆம் ஆண்டு ஐபோன் எஸ்இ மூலம் இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கியது.
இது ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மூன்று மின்னணு உற்பத்தி சேவை (EMS) பங்குதாரர்களைக் கொண்டுள்ளது.
ஐபோன் எஸ்இக்குப் பிறகு, இந்தியா ஐபோன் 11, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றையும் தயாரித்தது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.
ஆப்பிள் கடந்த ஆண்டு 'வொண்டர்லஸ்ட்' நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ், Apple Watch சீரிஸ் 9 மற்றும் Apple Watch அல்ட்ரா 2 ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. அதுவரை lightening port-ஐ கொண்டிருந்த நிறுவனம் முதல் முறையாக சார்ஜ் செய்ய type-c போர்ட்டை வழங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
It's Glowtime, Apple Event, iphone launch event 2024