ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழக்கும் முன் புலம்பெயர்வோர் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள்

Immigrants United kingdom
By Balamanuvelan Nov 26, 2021 11:04 AM GMT
Report

பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் படகு மூலம் பயணித்த புலம்பெயர்வோர் 27 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் பலியான ஒருவர், உயிரிழக்கும் முன், தன் நண்பர் ஒருவரை அழைத்து அவரிடம் கூறிய சில்லிடவைக்கும் வார்த்தைகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம், பிரித்தானியாவில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கும் நம்பிக்கையில், பிரான்சிலிருந்து சிறிய படகு ஒன்றில் 34 புலம்பெயர்வோர் பிரித்தானியாவை நோக்கி பயணித்துள்ளனர்.

ஆங்கிலக்கால்வாயில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த படகு தண்ணீரில் மூழ்க, அதில் பயணித்தவர்கள் தண்ணிரில் மூழ்கியுள்ளனர். இருவர் மட்டும் மீட்கப்பட, 27 பேரை சடலங்களாகத்தான் மீட்க முடிந்துள்ளது.

அவர்களில் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியும் கிடைத்துள்ளது. மொத்தம் 17 ஆண்கள், 7 பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரின் உயிரிழந்த உடல்கள் கிடைத்துள்ளன.

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழக்கும் முன் புலம்பெயர்வோர் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் | Its Not Good Dont Know Going Make Channel Crossing

இந்நிலையில், அந்த படகில் பயணித்த Mohammad Aziz (31) என்னும் ஈராக்கிய குர்திஷ் இனத்தவரான ஒருவர், தன் நண்பரான Peshraw Aziz என்பவரை மொபைலில் அழைத்துள்ளார்.

அப்போது, தாங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் படகு மூழ்கிவிடும் என்ற அச்சத்தில் அவர் நடுங்கிக்கொண்டிருந்ததை தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் Peshraw Aziz. நாங்கள் பயணிக்கும் படகு நல்ல படகு இல்லை, அதன் எஞ்சின் போதுமான சக்தி கொண்டது அல்ல, நாங்கள் பிரித்தானியா போய்ச் சேருவோமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் Mohammad Aziz.

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழக்கும் முன் புலம்பெயர்வோர் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் | Its Not Good Dont Know Going Make Channel Crossing

இதற்கிடையில், பலியானதாக கருதப்படும் Riaz Mohammed 12)Share Mohammed (17), Palowan (16) மறும் Shinai (15) ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முந்தைய முறை பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, லைஃப் ஜாக்கெட்களுடன் அவர்கள் நிற்கும் புகைப்படத்தை காணலாம்.

நேற்று அவர்களை மொபைலில் தொடர்புகொள்ள முயன்ற அவர்களது நண்பர்கள், அவர்களை தொடர்பு கொள்ள இயலாததால், அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என கவலைக்குள்ளாகியுள்ளார்கள்.  

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழக்கும் முன் புலம்பெயர்வோர் ஒருவர் கடைசியாக கூறிய வார்த்தைகள் | Its Not Good Dont Know Going Make Channel Crossing

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US