மெஸ்ஸி அதனை செய்ய வாய்ப்பே இல்லை! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல்
பார்சிலோனா அணிக்கு இனி மெஸ்ஸி திரும்ப வாய்ப்பில்லை என அர்ஜென்டினா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அணி மாறும் மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 74 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 32 கோல்கள் அடித்துள்ளார்.
அவரது சக போட்டியாளர் ரொனால்டோவை மிஞ்சும் அளவுக்கு, ஒரு பில்லியன் பவுண்டுகள் எனும் பாரிய தொகைக்கு அல்-ஹிலால் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இது மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாக இருந்தாலும், அவரை விரும்பும் பார்சிலோனா ரசிகர்கள் கலக்கமடையும் தகவலை அர்ஜென்டினா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
Jean-Francois Badias/AP Photo
அர்ஜென்டினா பத்திரிகையாளர்
அதாவது, பார்சிலோனா அணிக்கு மெஸ்ஸி திரும்புவது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார். மார்செலோ பெக்லர் எனும் அந்த நம்பகமான பத்திரிகையாளர் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'மெஸ்ஸியை பார்காவில் (பார்சிலோனா) பார்க்கலாம் என்ற நம்பிக்கை யாருக்காவது இருந்தால், அதனை பார்காவால் வழங்கவோ அல்லது உறுதியளிக்கவோ முடியாது. இது முற்றிலும் ஆஃப் ஸ்கிரிப்ட் திருப்பம் மற்றும் எல்லையின் முடிவாகும். மெஸ்ஸி ஏற்கனவே ஆர்வமுள்ள தரப்புகளிடம் பேசத் தொடங்கிவிட்டார்' என தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா மேலாளர்
அல்-ஹிலால் தவிர இண்டர் மியாமியும் அவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த கோடையில் மெஸ்ஸி மீண்டும் கட்டலான் அணியில் சேர விரும்புவதாக பார்சிலோனா மேலாளர் செவி தெரிவித்துள்ளார்.
லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 520 போட்டிகளில் விளையாடி 474 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Joan Monfort / Associated Press