நடிகர் ஆர்யாவை தப்ப வைப்பதற்காக நடத்தப்பட்டும் திட்டமிட்ட சதி இது! ஏமாற்றப்பட்ட ஜேர்மனியில் வாழும் இலங்கை பெண்
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இலங்கை பெண் ஆர்யாவை காப்பாற்றுவதற்காக திட்டமிட்ட சதி நடப்பதாக கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஜேர்மனியைச் சேர்ந்த பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி பெண் தரப்பில் வக்கீல் ஆனந்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆர்யா, ஜமீலா ஆகியோரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கில் முகமது அர்மான், இந்த மோசடியில் தான் மட்டுமே ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தாக கூறினார்.
மேலும், அப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததால் அவர் சரண் அடைந்ததை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. சி.பி.சி.ஐ.டி. பொலிசாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆர்யா, ஜமீலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் அவர்களை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை. ஆர்யாவை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே குற்றத்தை தாங்கள் செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி முடிக்கும் வரை ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறினார். ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் வழங்க கோரியதை தொடர்ந்து மனு மீதான விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகர் ஆர்யா கமிஷனை திடீர் சந்தித்து பேசினார். ஏனெனில் இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயாரின் பெயரை சேர்த்து பதிவு செய்ததாகவும், பின்னர் வழக்கில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாகவே நடிகர் ஆர்யா சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து சுமார் அரைமணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பினார்.