வருத்தம் தான்... கோபம் இல்லை: ஹரி- மேகன் தொடர்பில் பிரித்தானிய ராணியாரின் யாரும் எதிர்பார்க்காத இன்னொரு கருத்து
ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் கருத்துக்களால் வருத்தமடைந்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் மீது துளியும் கோபம் இல்லை என பிரித்தானிய ராணியார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், கடந்த வாரம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்
இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கலும். குறித்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதில், பிரித்தானிய அரச குடும்பம் இனபாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, அவ்வாறான கருத்தை தெரிவித்த நபர் தொடர்பில் தனிப்பட்ட முறையில் விசாரணை ஒன்றையும் முன்னெடுத்துள்ளார் பிரித்தானிய ராணியார்.
இந்த நிலையில், ஹரியும் மேகனும் தமக்கு எப்போதும் அன்புக்குரியவர்களே என்ற தகவலை ராணியார் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹரி- மேகன் தம்பதி குறிப்பிட்ட தகவல்களால் கொஞ்சம் வருத்தமடைந்ததாக குறிப்பிட்ட ராணியார், ஆனால் அவர்கள் மீது துளியளவும் கோபமில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாராம்.
மட்டுமின்றி, எப்போதும் அவர்களுடன் நான் இருப்பேன் என்றும் ராணியார் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. ஹரி மீது வருத்தமிருப்பதாக கூறியுள்ள ராணியார், மேகனும் அரண்மனை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஹரியுடன் திரும்பி வந்தார் என்றால் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஹரி- மேகனுடன் அரண்மனை வட்டாரம் வழமையான உரையாடல்களை துவங்கியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.

