Vespa -வை தோற்கடிக்கும் புதிய Electric Scooter! அதில் உள்ள சிறப்பம்சம் தான் ஹைலைட்
எலெக்ட்ரிக் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான iVOOMi தனது ஜீட் எக்ஸ் இசட்இ (Jeet X ZE) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொடலில் புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
Jeet X ZE Electric Scooter
இந்தியாவில் Jeet X ZE Electric Scooter -க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் புதிய தேர்வாக 3kWh பேட்டரி பேக் (3 KWH battery variant) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் 42 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இஆர்டபிள்யூ1 (ERW1)Steel tube மூலம் தயாரிக்கப்பட்ட Underbone Frame பயன்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குறைவான விலையிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.
இதனை தவிர Smart Speedometer, turn-by-turn navigation, bluetooth connectivity, call, message notifications, trip data, SOC alerts, comprehensive speed display ஆகிய அம்சங்களும் உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். இதில் சிறப்பான பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈகோ (Eco Mode), ரைடர் (Rider Mode) மற்றும் ஸ்பீடு (Speed Mode) ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட் ஆப்ஷன்களும் உள்ளன.
இதில் ஈகோ மோடில் 170 கிமீ ரேஞ்ஜையும், ரைடர் மோடில் 140 கிமீ ரேஞ்ஜையும் மற்றும் ஸ்பீடு மோடில் 130 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழு சார்ஜில் சுமார் 170 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அறிமுக விலை ரூ. 99,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலை மட்டுமே ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |