போயஸ் கார்டன் வீட்டை பார்த்தால் சந்தேகமா இருக்கு! சசிகலாவை விசாரிக்கனும்: பகீர் கிளப்பும் ஜெ தீபா
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது சந்தேகம் உள்ளதாக ஜெ தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அவரது அண்ணன் பிள்ளைகளான ஜெ தீபா, ஜெ தீபா ஆகியோர் நேற்று சென்றனர். அங்கு வாழ போவதாக ஜெ தீபா கூறியிருந்தார்.
இன்று அவர் அளித்த பேட்டியில், ஜெயலலிதா இறந்த அன்று என்னால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. வாசலில் தான் நின்றேன். முன்பை விட வேதா நிலைய வீடு தற்போது மிகவும் மாறியுள்ளது.
ஜெயலலிதா பயன்படுத்தி பொருட்களில் நிறைய பொருட்களை காணவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவுமே இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில் இல்லை. வீடு காலியாகவே உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வீட்டை பார்த்தாலே ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளது. அவரையும் விசாரிக்க வேண்டும்.
எங்களை ஜெயலலிதாவுடன் நெருங்க விடாமல் அவர் தான் தடுத்தார் என் கூறியுள்ளார்.