2.9 மில்லயன் டொலருக்கு விற்பனையான Jack Dorsey-ன் முதல் Tweet!
ட்விட்டர் நிறுவனர் Jack Dorsey-ன் முதல் ட்வீட் 2.9 மில்லயன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.
இதனை மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் Sina Estavi விலை கொடுத்து வாங்கியுள்ளார். 2006-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் திகதி, ட்விட்டர் நிறுவனர் Jack Dorsey முதல் முதலில் ஒரு டீவீட்டை பதிவிட்டார்.
அதில் "just setting up my twttr," என கூறியிருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்த முதல் டீவீட்டை, நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது.
Jack Dorsey ஏழை குடும்பங்களுக்காக 15 மில்லியன் டொலர் நன்கொடை அளிக்கிறார். அதில் ஒரு பங்காக இந்த பணத்தையும் சேர்த்துள்ளார் என கூறப்படுகிறது.
NFT (Non-Fungible Token) என சொல்லப்படும் இந்த டிஜிட்டல் மெசேஜை cryptocurrency கொடுத்துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை வாங்கிய தொழிலதிபர் Sina Estavi தனது ட்விட்டர் பக்கத்தில் "இது ஒரு ட்வீட் மட்டுமல்ல!
மோனாலிசா ஓவியம் போன்ற இந்த ட்வீட்டின் உண்மையான மதிப்பை மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு உணருவார்கள் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.