இந்தியாவை கண்டிப்பாக வீழ்த்த புதிய வீரரை அணியில் சேர்த்த ஜோ ரூட்! இங்கிலாந்து போடும் புது திட்டம்
இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்க்ளை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் வரும் 10-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளதால், இங்கிலாந்து அணி இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.
இதனால் இந்த போட்டியில் எப்படியாவது ஜெயித்தவிட வேண்டும், சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், இங்கிலாந்து ஐந்தாவது போட்டிக்கான வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
இதில், 4-வது போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதே போன்று, மான்செஸ்டர் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி, கடந்த 1986-ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் இரு தொடர்களை இழந்தது கிடையாது.
ஏற்கனவே நியூசிலாந்துடன், இங்கிலாந்து அணி தொடரை இழந்துள்ளதால், இந்தியாவுடனும் தோற்றால் மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.