10 விக்கெட்டுகளை சாய்த்த வீரர்! தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 329 ஓட்டங்கள் எடுத்தது. டேரல் மிட்செல் 109 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளையும், பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 360 ஓட்டங்கள் எடுத்தது. ஜானி பேர்ஸ்டோவ் 162 ஓட்டங்களும், ஓவெர்ட்டன் 97 ஓட்டங்களும் விளாசினர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளையும், சௌதீ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லாதம் 76 ஓட்டங்கள் விளாசினார். கேப்டன் வில்லியம்சன் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், மிட்செல் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் நியூசிலாந்து 326 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
கடைசி வரை களத்தில் இருந்த டாம் பிளெண்டல் 88 ஓட்டங்கள் எடுத்தார். சுழற்பந்துவீச்சில் மிரட்டிய ஜேக் லீச் இரண்டாவது இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 24 டெஸ்ட் போட்டிளில் விளையாடியுள்ள லீச்சுக்கு, 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
A first Test 10-wicket haul for Leachy ?
— England Cricket (@englandcricket) June 26, 2022
See every one of his wickets here ?
இங்கிலாந்து அணிக்கு 295 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், ஓலி போப் மற்றும் ஜோ ரூட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ROOOOOOOT 5⃣0⃣ ?
— England Cricket (@englandcricket) June 26, 2022
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
??????? #ENGvNZ ?? @IGcom pic.twitter.com/DRz1GD6jXH
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்துள்ளது. போப் 12 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Four wickets in the final session ?
— England Cricket (@englandcricket) June 25, 2022
New Zealand 168-5 at the close leading by 137 ?
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
??????? #ENGvNZ ?? pic.twitter.com/ExSGtb7L0v
அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 113 ஓட்டங்களே தேவை என்பதால், நியூசிலாந்து அணி ஒயிட்வாஷ் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
A solid afternoon session for the @BLACKCAPS who lead by 94 ?
— England Cricket (@englandcricket) June 25, 2022
Scorecard/clips: https://t.co/AIVHwazVYX
??????? #ENGvNZ ?? pic.twitter.com/5o8T8tFK2y
Bairstow passes 150 ?
— England Cricket (@englandcricket) June 25, 2022
Rockets from Broady ?
109 runs from 23 overs in the session
??????? #ENGvNZ ??