இனி கிரிக்கெட் விளையாடலாமா? வேண்டாமா? இங்கிலாந்து பந்துவீச்சாளரை தனது அதிரடி ஆட்டத்தால் புலம்பவிட்ட இந்திய வீரர்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது தனது பந்துவீச்சை ரிஷப் பண்ட் துவம்சம் செய்துவிட்டார் என சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் கூறியுள்ளார்.
இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிங்கில் மோசமாக விளையாடி தோற்றாலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச், முதல் இன்னிங்சின் போது இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் எனது பந்துவீச்சை தும்சம் செய்துவிட்டார்.
8 ஓவர்கள் 77 ரன்கள் விட்டுக் கொடுத்த பிறகு நான் இனி கிரிக்கெட் விளையாடலாமா அல்லது வேண்டாமா என்பது எனக்கே உறுதியாகவில்லை என்ற நிலையில் இருந்தேன் அந்த பேர் அதிர்ச்சிலிருந்து மீண்டு அணியின் வெற்றிக்கு பங்களிப்பு கொடுத்ததில் மிகப் பெருமை அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஜேக் லீச் வீசிய ஒவ்வொரு ஓவரில் பண்ட் குறைந்தது ஒரு பவுண்டரிகளையாவது விளாசி ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.