தித்திக்கும் சுவையில் பலாப்பழ போண்டா.., இலகுவாக எப்படி செய்வது?
முக்கனியில் ஒன்றான பலாப்பழம் அதன் தனித்துவமான சுவைக்கும் நறுமணத்திற்கும் பெயர் பெற்றது.
பலாப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பலாப்பழ போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பலாச்சுளை- 10
- நாட்டுச்சர்க்கரை- 4 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 4 ஸ்பூன்
- ஏலக்காய்- 2
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் நறுக்கிய பலாச்சுளை, நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
இறுதியாக அரைத்த மாவை சிறிய சிறிய உருண்டையாக எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான பலாப்பழ போண்டா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |