பலாப்பழத்தால் இவ்வளவு பக்கவிளைவுகள் ஏற்படுமா?
பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
அதே சமயம் பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
பலாப்பழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.
பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.