தித்திக்கும் பலாப்பழ அல்வா ரெசிபி!
பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது.
வைட்டமின் A, B, C, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.
பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும்.இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடியது.
insanely good recipes
இத்தகைய மருத்துவ பலன்கள் வாய்ந்த பலாப்பழத்தில் சுவையான அல்வா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருள்
- கொட்டை நீக்கிய பலாச்சுளை - 5
- பொடித்த வெல்லம் - ஒரு கப்
- நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
சிறிய துண்டுகளாக வெட்டிய பலாப்பழத்தை ஒரு கப் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
yummy tummy aarthi
பலாச்சுளைகளை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லக்கரைசல் மற்றும் அரைத்த பலாப்பழ விழுது சேர்த்து சூடாக்கி கிளறவும்.
அவ்வப்போது நெய் ஊற்றிக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் இறக்கினால் சுவையான பலாப்பழ அல்வா தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |