பிரபல நடிகருக்கு சுவிட்சர்லாந்தில் வழங்கப்பட இருக்கும் கௌரவம்
பிரபல நடிகரான ஜாக்கி சானுக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனை விருதொன்று வழங்கப்பட உள்ளது.
பிரபல நடிகருக்கு வழங்கப்பட இருக்கும் கௌரவம்
ஆகத்து மாதம், பிரபல நடிகரும் மார்ஷியல் ஆர்ட்டிஸ்டுமான ஜாக்கி சானுக்கு,, சுவிட்சர்லாந்தின் உயரிய கௌரவமான Leopard of Honour என்னும் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது, சுவிட்சர்லாந்திலுள்ள Locarnoவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் வாழ்நாள் விருது ஆகும்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குநர், பாடகர், விளையாட்டுவீரர், ஸ்டண்ட்மேன் என பன்முகத்திறன் கொண்ட ஜாக்கி சான் இந்த விருதுக்கு தகுதியானவர் என சொல்லத் தேவையில்லை.
2024ஆம் ஆண்டு, இந்த விருது இந்திய நடிகரான ஷாரூக்கானுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |