பாம்புகள், எலிகள் மத்தியில் வாழ்ந்த விஜய் பட வில்லன்: இன்று ரூ.33 கோடி சொகுசு வீடு! யார் அந்த நடிகர்?

Tamil Cinema Bollywood Money Kollywood
By Thiru Jul 29, 2025 01:13 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அந்த ஆடம்பரத்திற்குப் பின்னால் அவர்களின் பல வருட போராட்டங்களும், கடின உழைப்பும் மறைந்திருக்கின்றன.

ஒரு சிலர் மட்டுமே வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் விடாமுயற்சியாலும், உழைப்பாலும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

  அப்படியான ஒரு நடிகர், 33 வருடங்களாக ஒரே ஒரு அறை கொண்ட சிறிய வீட்டில், பாம்புகள் மற்றும் எலிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தவர், இன்று ₹31 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசிக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல, பாலிவுட்டின் ஜாம்பவான் நடிகர் ஜாக்கி ஷெராஃப்தான். விஜய்யின் "பிகில்" படத்தில் வில்லனாக நடித்தவர்.

Jackie Shroff

1980கள் மற்றும் 90களில் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்த ஜாக்கி ஷெராஃப், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

“ ஹீரோ", "பரிந்தா" மற்றும் "ரங்கீலா" போன்ற வெற்றிப் படங்கள் அவரது வாழ்க்கையை அடியோடு மாற்றின. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் ஜாக்கி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எளிமையான ஆரம்பம்

சிறு சிறு வேடங்களில் நடித்து, இன்று வெள்ளித்திரையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, கோடிகளில் சம்பளம் வாங்கும் ஜாக்கி ஷெராஃப், தனது வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களை மும்பையில் உள்ள ஒரு சிறிய, ஒற்றை அறை வீட்டில் கழித்துள்ளார்.

 Jackie Shroff

மும்பையின் 'சால்' எனப்படும் குடியிருப்பில் தான் ஜாக்கி ஷெராஃபின் வாழ்க்கை தொடங்கியது. மும்பையின் டீன் பட்டி, வால்கேஷ்வர் பகுதியில் வறுமையிலேயே அவர் வளர்ந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒரே அறையில் வசித்து வந்தனர்.

சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், தான் வந்த பாதையையும், பழைய நினைவுகளையும் ஜாக்கி ஷெராஃப் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.

"அந்த நினைவுகள் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. நான் அந்த அறையின் தரையில் தூங்குவேன். ஒருமுறை அறையின் மூலையில் ஒரு பாம்பைப் பார்த்தேன். இன்னொரு முறை ஒரு எலி என்னையும் என் அம்மாவையும் கடித்தது," என்று அவர் கூறியுள்ளார்.

இப்படி வறுமையில் வாழ்ந்த அவர், எப்படியாவது பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்.

வாழ்க்கை திருப்புமுனை

ஒரு கட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்காக, 11 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு நின்ற ஜாக்கி, கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்தார்.

Jackie Shroff

அப்படி வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், ஜாக்கியைப் பார்த்த ஒரு நபர், சினிமாவில் ஒரு வேடத்தில் நடிக்க அழைத்தார். அதுவே அவரது வாழ்க்கை மாறும் ஆரம்பமாக அமைந்தது.

1982ல் "சுவாமி தாதா" திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

அடுத்த வருடமே வெளியான "ஹீரோ" என்ற பிளாக்பஸ்டர் படத்தில் அவர் நடித்த வேடம் பெரும் வெற்றியைப் பெற, அவரது வாழ்க்கையே தலைகீழானது.

ஒரே இரவில் பாலிவுட் நட்சத்திரமாக மாறிய அவர், இன்று வரை ஒரு மின்னும் நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார்.

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்?

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்?

செழுமையடைந்த வாழ்க்கை

வெற்றிகரமான நட்சத்திரமாக மாறி, கோடிகளில் பணம் ஈட்டிய பிறகும், ஜாக்கி ஷெராஃப் தனது கடந்த காலத்தை மறக்கவில்லை.

Jackie Shroff

சிறு வயதில் தான் வாழ்ந்த வீட்டை வாங்க அவர் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டாராம்.

இன்று, ஜாக்கி ஷெராஃபின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் இப்போது மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

இந்த வீட்டின் விலை சுமார் ₹33 கோடி என்று கூறப்படுகிறது. அதேபோல், ஜாக்கி ஷெராஃபின் நிகர மதிப்பு சுமார் ₹212 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சினிமாவில் தனது சாதனைகளுக்கு அப்பால், ஜாக்கி ஷெராஃப் தனது அளவற்ற தாராள குணம் மற்றும் உதவும் மனப்பான்மைக்காக அறியப்படுகிறார். முடிந்தபோதெல்லாம் ஏழைகளுக்கு உதவி செய்யும் அவர், தற்போது சுமார் 100 ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

Jackie Shroff

ஏழைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவ, நானாவதி மருத்துவமனையில் ஒரு கணக்கையும் பராமரித்து வருகிறார். தனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்காகச் செலவிடுகிறார்.

தெருக் குழந்தைகள் பசியுடன் இருந்தால், எந்த நேரத்திலும் தன்னை அழைக்கலாம் என்று கூறி, அவர்களின் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறாராம். அப்படி அழைத்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US