முதல் சர்வதேச சதம் விளாசிய இங்கிலாந்து வீரர்: ஆஷஸ் கடைசி டெஸ்டில் அபாரம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
கடைசி டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
Pic: Englandcricket/ESPNcricinfo/X
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்கள் குவிக்க, அவுஸ்திரேலியா 567 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 138 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 71 ஓட்டங்களும் விளாசினர். கார்ஸ், டங் தலா 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஜக் கிராவ்லே 1 ரன்னில் வெளியேறினார்.
ஜேக்கப் பெத்தேல் சதம்
அடுத்து பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் ஜேக்கப் பெத்தேல் கைகோர்த்தனர். அதிரடியாக ஆடிய டக்கெட் 55 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். தொடர்ந்து வந்த ரூட் 6 ஓட்டங்கள் ஆட்டமிழக்க ஹாரி ப்ரூக் களம் கண்டார்.
இதற்கிடையில் அரைசதம் கடந்த ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell), தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 99 ஓட்டங்களில் இருந்த பெத்தேல் 100ஐ தொட சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் இறங்கி வந்து பவுண்டரி அடித்து மூன்று இலக்க ஸ்கோரை எட்டினார். இதன்மூலம் முதல் சதத்தை ஆஷஸ் தொடரில் அடித்த வீரர்களில் பட்டியலில் ஜேக்கப் பெத்தேல் இணைந்தார்.
Pic: AP Photo
Pic: X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |