இனி அதகளம்தான்! அதிரடி வீரரை பயிற்சியாளராக நியமித்த நியூசிலாந்து
நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் ஜேக்கப் ஓரமை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி செப்டம்பர் மாதம் விளையாடுகிறது.
அதனைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணி புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது. 46 வயதான முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியூசிலாந்தின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேக்கப் ஓரம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பயிற்சியாளராக ஓரம் களமிறங்குவார்.
பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறித்து ஜேக்கப் ஓரம் (Jacob Oram) கூறுகையில், "இந்த பாத்திரத்தை (பயிற்சியாளர்) தொடங்குவதற்கு காத்திருக்க முடியாது. பிளாக் கேப்ஸுடன் மீண்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் என் வாழ்க்கையில் ஒரு பாரிய பகுதியாக இருந்த ஒரு குழுவுடன் மீண்டும் ஈடுபடுவது ஒரு உண்மையான மரியாதை" என தெரிவித்தார்.
ஜேக்கப் ஓரம் 160 போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்டுகளும் வீழ்த்திய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |