தவிர்க்க முடியாத தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்திக்கும்! ரிஷி சுனக்கின் தீவிர விமர்சகர் எச்சரிக்கை
பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தல் 2025
பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய வாக்கெடுப்பின்படி கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் வரை பின் தங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் தீவிர அரசியல் விமர்சகரும், முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரீஸ்-மோக்கின் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், 'ஜேக்கப் இதைப் பற்றி ஒரே இரவில் யோசித்தார். ஆனால் போரிஸுக்கு அவர் காட்டிய விசுவாசம், மற்றவர்கள் போட்டியில் வெற்றிபெற ஒரு அணியை அவர் வைக்கவில்லை என்று முடிவு செய்தார்' என தெரிவித்துள்ளது.
ஜேக்கப் ரீஸ் - மோக்
அடுத்தப் பொதுத் தேர்தல் குறித்து ரீஸ் - மோக் கூறும்போது, கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை தேர்தலில் சந்திக்கும் என தெரிவித்தார்.
டோரி கட்சியில் ரீஸ்-மோக் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜேக்கப் நிச்சயமாக உறுப்பினர்களுக்கு ஒரு பிரபலமான தேர்வாக இருப்பார் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் பழமைவாதத்திற்கு மீட்டமைக்க சரியான தலைவராக இருப்பார் என எம்.பி ஒருவர் கூறினார்.