Jacques Kallisக்கு குழந்தை பிறந்தது - வைரலாகும் புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலீஸ்க்கு(Jacques Kallis) பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜாம்பவான் ஜாக் காலீஸ்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தவர் ஜாக் காலீஸ். இவருக்கென்று உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இப்போட்டியில், இந்தியா மகாராஜாஸ், ஆசியா லயன்ஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் கலந்துகொண்டு ஆடின்ர்.
இப்போட்டியில் அனைத்து வகையிலும் சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு அபாரமான பங்களிப்பு செய்தவர் ஜாக் காலிஸ்.
தன்னுடைய 47 வயதிலும் அதிரடியாக துப்பாட்டம் செய்து அரைசதம் விளாசினார். 54 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்து அசத்தினார் ஜாக் காலீஸ்.
ஜாக் காலீஸ் கணிப்பு
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய முதல் கோப்பையை வென்று நீண்ட கால கனவை நிஜமாக்கும் என்று முன்னாள் தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஜேக் காலிஸ் கணித்து தெரிவித்தார்.
குழந்தை பிறந்தது
இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலீஸ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜாக் காலீஸ் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஜாக் காலீஸுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Introducing our beautiful baby girl, Chloé Grace Kallis, born this morning at 08:37. Our tiny little princess weighing in at 2.88kg already got Daddy wrapped around her little finger. Mom & baby doing well and Joshy is loving his little sister. Our hearts are exploding! pic.twitter.com/2SHlDFgWet
— Jacques Kallis (@jacqueskallis75) April 19, 2023