போட்டியை நிறுத்த ஸ்டோக்ஸ் கேட்ட அந்த கேள்வி! மறுத்த ஜடேஜா..இணையத்தில் பற்றியெரியும் விடயம்
நான்காவது டெஸ்டின் கடைசி நாளில் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என ஜடேஜாவிடம் கேட்டது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
உறுதியான டிரா
ஓல்ட் டிராஃப்போர்டில் நடந்த இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
Scored a hundred, saved the Test, farmed ♾ aura! 💁♂#RavindraJadeja didn't hesitate, till the end 👀#ENGvIND 👉 5th TEST | Starts THU, 31st July, 2:30 PM | Streaming on JioHotstar! pic.twitter.com/cc3INlS07P
— Star Sports (@StarSportsIndia) July 27, 2025
கடைசி நாளில் ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மணிநேரமே இருந்ததால் போட்டி டிராவில் முடிவது உறுதியானது.
அச்சமயம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) இந்திய துடுப்பாட்ட வீரர்களிடம் (ஜடேஜா, சுந்தர்) வந்து போட்டியை முடித்து வைக்க தனது கையை வழங்கினார்.
ஆனால், அவரது யோசனையை ஏற்காமல் இந்திய அணி தொடர்ந்து துடுப்பாட்டம் செய்தது.
ஸ்டோக்ஸின் கேள்வி
களத்தில் இரு அணி வீரர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "புரூக் மற்றும் டக்கெட்டுக்கு எதிராக டெஸ்ட் சதம் அடிக்க விரும்புகிறீர்களா ஜட்டு?" என ஸ்டோக்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜடேஜா, "நான் என்ன செய்ய வேண்டும், வெளிய செல்லுங்கள்" என கூற, ஜாக் கிராவ்லே, "உங்களால் முடியும், உங்கள் கையை குலுங்குங்கள்" என்கிறார்.
இதுகுறித்து வர்ணனையாளராக இருந்து சுனில் கவாஸ்கர், "இங்கிலாந்து வீரர்கள் இங்கே சதத்தை பாராட்டவில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
நான் அவர்களை துடுப்பாட்டம் செய்ய விடுங்கள், அணியை 15 ஓவர்கள் முழுவதும் மைதானத்திலேயே வைத்திருக்க சொல்வேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |