சர்வதேச கிரிக்கெட்டில் பிரம்மாண்ட சாதனை படைத்த ஜடேஜா!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா 5 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் அவர் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.
@Getty Images
அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன், 500 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் ஜடேஜா ஆவார்.
கபில் தேவ்
இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் இந்த சாதனையை முதல் முறையாக படைத்த இந்தியர் ஆவார். கபில் தேவ் மொத்தம் 9031 ஓட்டங்களும், 687 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
Twitter/@ICC
ரவீந்திர ஜடேஜா டெஸ்டில் 260 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 189 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 5523 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.