அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த இரண்டு ஆல்ரவுண்டர்கள்! 400 ஓட்டங்கள் குவிப்பு
நாக்பூர் டெஸ்டில் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி 400 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஷமி அதிரடி
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுக்கு 321 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 66 ஓட்டங்களுடனும், அக்சர் படேல் 52 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா மேற்கொண்டு 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முர்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
A brilliant 50-run partnership comes up between @akshar2026 & @MdShami11 ??#TeamIndia's lead goes past 200
— BCCI (@BCCI) February 11, 2023
Live - https://t.co/SwTGoyHfZx #INDvAUS @mastercardindia pic.twitter.com/1N4RdhyqDI
அடுத்து களமிறங்கிய ஷமி, அக்சர் படேலுடன் சேர்ந்து அதிரடியில் மிரட்டினார். அவர் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
? SHAMI SPECIAL! That was entertaining while it lasted.
— The Bharat Army (@thebharatarmy) February 11, 2023
? A splendid knock from @MdShami11!
? BCCI • #MohammedShami #INDvAUS #AUSvIND #BorderGavaskarTrophy #TeamIndia #BharatArmy pic.twitter.com/u0vuLfYIXu
இந்திய அணி முன்னிலை
மறுபுறம் பவுண்டரிகளை விரட்டிய அக்சர் படேல் 84 ஓட்டங்கள் குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார். இதன்மூலம் இந்திய அணி 400 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அவுஸ்திரேலிய தரப்பில் முர்பி 7 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணி 400 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் 223 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
?? TAKE A BOW, AXAR! The southpaw played a fine knock to register his personal best score in Tests.
— The Bharat Army (@thebharatarmy) February 11, 2023
? BCCI • #AxarPatel #INDvAUS #AUSvIND #BorderGavaskarTrophy #TeamIndia #BharatArmy pic.twitter.com/IRuA6a98XI