ஓய்வை அறிவிக்க உள்ளதாக பரவிய செய்திகள்... சூசகமாக உறுதிப்படுத்திய ஜடேஜா
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வை அறிவிக்க உள்ளதாக பரவிய செய்தியின் உண்மை தன்மையை ஜடேஜா சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் மும்பையில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து விலகிய ஜடேஜா, தென் ஆப்பிரிக்க உடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்ததால், ஜடேஜா 2வது போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக சக வீரர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக செய்திகள் பரவியது.
இச்செய்தி இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. பலர் ஜடேஜா தனது முடிவை மாற்ற வேண்டும் என கோரினார்.
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
இந்நிலைியல், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற இருப்பதாக பரவிய செய்தி பொய் என்பதை ஜடேஜா சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
Long way to go???? pic.twitter.com/tE9EdFI7oh
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
தான் டெஸ்ட் அணி ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படத்துடன் ‘இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்’ என ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தான் தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறபோவதில்லை என்பதை ஜடேஜா உறுதிப்படுத்தியுள்ளார்.