பாகிஸ்தானுடனான தோல்விக்குப் பிறகு கோலி சொன்ன காரணத்தால் ஜடேஜா அதிருப்தி!
பாகிஸ்தானுடனான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலி கூறிய காரணத்தால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அக்டோபர் 24ம் திகதி டி20 உலகக் கோப்பையில் நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றது.
போட்டியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கேப்டன் விராட் கோலி, பவர்பிளேயில் பல விக்கெட்டுகளை இழந்ததால் அவர்களால் மீண்டும் வருவதற்கு கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
கோலி சொன்ன காரணத்தால் தான் அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஜடேஜா கூறியதாவது, அன்றைய தினம் விராட் கோலி கூறியதைக் கேட்டேன், பவர்பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாங்கள் பின்தங்கினோம் என கூறினார்..
கோலியின் இக்காரணத்தை கேட்டு நான் அதிருப்தியடைந்தேன். விராட் கோலி போன்ற ஒரு வீரர் நடுவில் இருக்கும்போது, போட்டி முடிவுக்கு வர வாய்ப்பே இல்லை.
இரண்டு பந்துகள் கூட விளையாடாமல் கோலி போட்டியில் பின்தங்கிவிட்டதாக யோசித்துக் கொண்டிருந்துள்ளார். எனவே, இது இந்தியாவின் அணுகுமுறையை காட்டுகிறது என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.